01. எரியுண்ட நகரத்தில் இருந்து சேதிகள் வருவதற்கான.. கடைசி வழியையும் நேற்று மூடினர்.. கொஞ்சமாய்க் கேட்டுக்கொண்டிருந்த விசும்பல்களும் தேம்பல்களும் கூட கேட்காது போகும் இனி.. கருவறையின் கதவுகளிற்குப் பின்னால் ஒழித்தபடி.. இடுக்குகள் வழியே கடவுள் பார்த்துக்கொண்டிருந்தார்.. தனது பலிபீடத்தில் வழிந்துகொண்டிருக்கும்.. குருதியின் கொடும்பசுமையை கடவுளின் பார்வை நடுங்கிக் கொண்டிருந்தது… பதுங்குகுழிகளில் இருந்து சிலந்திகள் வெளியேறிய அன்றைக்கு.. குழந்தைகள் சம்மணமிட்டு அமர்வதை மறந்தார்கள்.. அந்நியர்களின் காலரவங்கள் நொருக்கிய சருகோசைக்கு மான்கள் பதகளித்துத்…
Category: கவிதைகள்
உன் வருகையைக் கொண்டாடுதல்
01. காலம் ஒரு கொடியகனவாயிற்று உன் பிரியங்கள் என்னை மீளெழுப்பின உனது வார்தைகள் எனது காயங்களை ஆற்றின உன் பார்வைகள் தொலைந்து கொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்தன.. என்ன சொல்ல எனது சாம்பர் மேட்டிலிருந்து புதியமுளைகளை உருவாக்கும் உனது புன்னகைகளை என்னோடே விட்டுவிடு நான் பிழைத்துப் போகிறேன்… 02. நான் தயங்குகிறேன் மிகவும் உன் பிரியத்தின் சுவர்கள் கண்ணாடிகளால் ஆனவையாயிருக்கையில் கற்களை வீசிவிடக் கூடாதென்கிற தயக்கம்…
மனிதனைத் தின்னும் பல்லிகள்
எந்தப் பூனையும் என் ஜன்னலில் நின்று அவசரமாய்க் குதித்திறங்குவதில்லை ஆளரவத்திற்கு சூரியன் ஒரு பொறாமை கொண்ட அயல் வீட்டுக்காரனைப்போல் எட்டிப்பார்க்கிறது ஜன்னல் வழி உடனும் அவசரமாய் வெளியேறி விடுகிறது குப்பையைப்போல் தன் தகிப்பை உள்ளே வீசி எறிந்துவிட்டு பல்லிகள் பெருகிவிட்ட இவ்வறையில் மனிதனைத் தின்னும் பல்லிகள் குறித்த கனவின் பீதி நிறைய பாதியில் திடுக்குற்று விழிக்கிறேன்.. பல்லிகள் விழித்திருக்கின்றன என் தூக்கத்தைக் காத்துக்கொண்டு.