நீ என்னிடம் தந்துபோனசிலமுத்தங்களும்புன்னகைகளும்மட்டும் எனக்குப்போதுமானதென்றுஉனக்கு யார் சொன்னது…? என் ஆயுளைத் தின்கிறஉன்நினைவுகளின் காலடிஓசையற்று நகர்கிறதுதொலைவிற்கு… உனக்கான கடிதங்கள்எழுதப்படாமலேயேஎனக்குள் இறந்தனகவிதைகளும்… நீளும் தொலைவுகளைநெருக்கத் திராணியற்றுநெளியும் என் வாழ்வு.. இப்போதுஉன் காலடிகளையும்தொலைவிற்குசெலுத்துகிறது காற்று மழையைப்போலநிரந்தரமற்றிருக்கும்நமது பிரிவுஅதைப்போலவேஅழுத்தமானதும்கவனிக்கச்செய்வதும் கூட த.அகிலன்
Category: கவிதைகள்
சிந்திப்பது குறித்து……..
நான்சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன்எதைப்பற்றியும்..அது என்னைக் கேள்விகளால் குடைந்து கொண்டேயிருக்கிறது. அது எப்போதும் மகிழ்ச்சியின்எதிரியாயும்துயரத்தின் தொடர்ச்சியாயுமே நீள்கிறது. எல்லோருடையபுன்னகைகளின் பின்hனால் உள்ளவேட்டைப்பற்கள் குறித்தும்ஒளிரும் ஓவ்வொரு வார்த்தைகளினதும்குரூரநிறத்தையும்சிந்தனைதான்எனக்குச் சொலலித்தருகிறது.. புன்னகைகளைவெறுமனே புன்னகைகளாயும்வார்த்தைகளை வெறுமனே வார்த்தைகளாயும்மனிதர்களின்கண்களின் பின்னால் உள்ளஇருள் நிறைந்த காடுகளை பசும் வயல்களெனவும்நான் நம்பவேண்டுமெனில்நிச்சயமாக நான்சிந்திப்பதை நிறுத்தியேயாகவேண்டும் த.அகிலன்
இப்போது
என்னிடம் நிறைவேறாதஇக்கவிதையின்பின்னரும்தேங்கிக்கிடக்கும்வார்த்தைகள்உனக்காய்…. மின்சாரமற்ற ஒரு நாளின் இரவைகுண்டுச்சத்தங்கள்நிறைத்தன.அமைதியும் தூக்கமுமற்றஅப்பொழுதுகளைநீ மீளவும் தருகிறாய்…. காற்றில் தொலைந்துபோனகைவிளக்கின் ஒளியோடுபோயின உனது பாடல்கள். உனது பாடல்களைமீட்கவும்……. காற்றில் தொலைந்து போன கைவிளக்கின் ஒளியைக்காணவுமாய்நீள்கிறது என்காத்திருப்பு… எனக்கு அப்போது தெரிந்திருந்தது தூங்காதிருக்கவும்காத்திருக்கவும்விளக்கின் ஒளியையும்உனது பாடல்கள் குறித்தும் த.அகிலன்