எனது வெள்ளைச் சட்டையில்இரத்தம் படிந்து பிசுபிசுப்பாய் ஒட்டியதுநாற்றம் மூக்கைக் குமட்டிற்றுஎனது பள்ளியோகூரை கொட்டிப்போய்கரும்பலகை நிறமிழந்துவெண்கட்டி சிவந்து கசிந்துகதிரையோவெறும் பலகைத்துண்டங்களாய்சுவர்களில்சன்னங்களால் யன்னல்கள் முளைத்தது நசிந்து போனது வாழ்வுஎன் பள்ளிக்கூடம் பற்றிய கனவுகளும்சாவின் அலறல்களுக்கிடையில்அடையாளமற்றனவாய்… த.அகிலன்
Category: கவிதைகள்
அடுத்து வரும் கணம்……
என்னுடைய காலடிச்சுவடுகள்கண்காணிக்கப் படுபவைபுன்னகைகள் விசாரணைக்கானவைஉயிர் குலையும்ஓர் ஊரின்பெரும்பயணி நான் அடுத்த கணங்கள்பற்றிய அச்சங்களும் துயரங்களும்நிரம்பிக் கிடக்கிறதுவழிமுழுதும் துயரெழுதும் கவிதைவழிமுழுதும்வருகிறது துணைக்குதொலைவிலெழும் வேட்டோசைக்குச்செத்துப்போகிறான்என்சகபயணி துப்பாக்கிகளிற்குக்கால்கள் முளைத்த இரவில்அவை வெறிகொண்டெழுந்தன ஒரு கலையாடியின் கோபம்போலஇரவு முழுதும் பெய்த மழையில்கரைந்து போயிருந்ததுபலியாடுகளின் இரத்தம் அடுத்த கணங்கள்பற்றிய அச்சங்களும்துயரங்களும்நிரம்பிக்கிடக்கிறதுவழிமுழுதும் த.அகிலன்
ஒரு பிரகடனத்தின் எதிர்வினை
நண்பர்களே அடிக்கடி அரசபடைகளின் கிபிர் விமானங்கள் குண்டு போட்டும் போடுவதாய் மிரட்டியும் கொண்டிருக்கும் போர் தொடங்குமா தொடங்காதா என்றெல்லாம் கணக்குப் போடுகிற அரசியல் தெரியாத அப்பவிச்சனங்களின் பிரதிநிதியாய் வன்னியில் இருந்து வருகிறது இந்தக்கவிதை ஒரு இனத்தின் வாழ்வு இப்படித்தான் இருந்தது.இருக்கிறது…– த.அகிலன் எங்களுடையபுன்னகையை சந்தேகிக்கும்எல்லோருக்கும் சொல்கிறோம்……. எங்கள் கடல்அழகாயிருந்ததுஎங்கள் நதியிடம்சங்கீதமிருந்ததுஎங்கள் பறவைகளிடம் கூடவிடுதலையின் பாடல்இருந்தது…..எங்கள் நிலத்தில்தான்எங்கள் வேர்கள் இருந்தன…நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம்எம்மூரில்… அவர்கள்எங்கள் கடலைத்தின்றார்கள்…அவர்கள்தான்எங்கள் நதியின் குரல்வளையைநசித்தார்கள்…அவர்கள்தான்எங்கள் பறவைகளை…