அன்பேகாற்றில் நழுவவிடும்உன் வார்த்தைகளில் கத்திகள்வைத்தல்எங்கனம் சாத்தியமாகிறது… த.அகிலன்
Category: கவிதைகள்
மழை…..
ஒருநீண்ட தார்ச்சாலையில்சோவெனத்துரத்தும்மழையென விரட்டுகிறதுஉன்பிரிவு. ஒருகொடுமிருகத்தைப்போல். எதிரே விரியும்பெருவெளியின் நீளத்தைஎன் கால்கள் விழுங்க விழுங்க. மறுபடியும்முடிவற்று விரிகிறதுவெளிஉனை அழைக்கும்குரல்தொண்டைக்குள் தேங்கஎனை விழுங்கிப்போகிறது மழை. த.அகிலன்
மெளனத்தின் சங்கீதம்…
கண்களில்கேள்விகளோடு அலைகிறார் மனிதர்மௌனம் காதுகளில்இரைகிறது….. தொடர்ச்சியாய்உதைக்கும் கடிகாரம் நின்று போகையில்….. மரங்கள்ப+க்களைப்பிரசவிக்கும் போதான அலறல்நிச்சயமாய்கேட்கிறது எனக்கு… வானெங்கும் விரியும்நிலவின் ஓவியத்தையும்ரகுமானை வென்று வருடுகிறமௌனத்தின் சங்கீதத்தையும்ரசிக்க முடிகிறது… அன்பேநிசப்தத்தில்என்காதுகளை மூடுகிறேன்மனங்களின் இரைச்சல் தாளாமல் உன் பிரிவின்பின்இப்படித்தான்ஒன்றோடொன்று ஒட்டாமல்உதிர்கிறதுஎனக்கான வார்த்தைகள்த.அகிலன்