பூக்களால் ஆகிறதுஒரு கவிதை. என் எதிரில்பூக்களைத் தவறவிடாஉன் உதடுகள். ஆனாலும்நான்நிறையப் பூக்கள்கொண்டு வருகிறேன்புறந்தள்ளிப்போகிறாய்…. அவைஒவ்வொன்றாய்வாடி வீழஉன்ஒவ்வொரு மறுதலிப்பின்முடிவிலும்நான்பூக்களைச் சேமிக்கிறேன். ஒரு பட்டாம்பூச்சியைப்போல்சட்டென்று ஒட்டிப்பறந்து போகிறதுஉன்புன்னகை. த.அகிலன்
Category: கவிதைகள்
சூரியனின் சித்திரம்…
ஒவ்வொரு பூவிடமும்இருக்கிறது சூரியன்குறித்த சித்திரம். பூக்களைத்தமக்குள்பதுக்கிக்கிடக்கும்மொட்டுக்களின் முதுகுகளில்எழுதப்படுகிறதுசூரியனின் தோல்வி. பூக்களின் முகங்களில்ஒட்டிக்கிடக்கிறதுசூரியனின் புன்னகை. ஆனாலும்இரவில்நிலவுக்குப்பயந்துஅவற்றைஉதிர்த்துக்கொண்டுதம்மை உரிக்கின்றனமரங்கள். த.அகிலன்
புன்னகை விற்பவள்
நதிஅதன் புன்னகையைஒழிக்கிறதுகடல்மடியில் அவள்அனாசயமாய்அதை எடுத்துச்சூடுகிறாள்தன் கழுத்தில் நிலவுவானில் வரையும்அவள்கைகளிற்குச் சிக்காதஒளியின் புன்னகையை அவள் என் புன்னகையைவிற்றுக் கொண்டிருக்கிறாள்… தான்நட்சத்திரங்களைஉதிர்ப்பதறியாது ஒருபூவின் புன்னகைசெத்துக் கொண்டிருக்கிறதுஅவள் கூந்தலில் த.அகிலன்