என் காதலே! இந்தப் பூமிப்பந்தின்எல்லா நுனியிலும்நீதான்நிறைந்து கிடைக்கிறாய்….. என் வார்த்தைகள்திணறும். உனைவிபரிக்கச் சொல்லற்றுத்துடிக்கும்என் கவிதை…. உதிரமுடியாத ப+க்களை எப்படித்தான்கைவசம் வைத்திருக்கிறாய்மாறாச் சிலிர்புடன்காதலின் தெருக்கள் எங்கும்விரவிக்கிடக்கிறது பூக்கள். குடித்துத் தீர்ந்தபின்பும்திகட்டித் திகட்டிமிஞ்சிக்கிடக்கிற அன்பின் பானமாய்நிறைந்து வழிகிறாய்.. என்வாழ்வின் ஒவ்வொருதுளியிலும்உனக்குத்தான்பாதிசீச்சிமுழுவதுமே உனது த.அகிலன்
Category: கவிதைகள்
இறைவனுக்கு ஒரு சாபம்…
சே!என் அதிகாலைக்கனவுகளில்தேவதைநுழைகிற நேரமாய்ப் பார்த்துகாதுகளில் நுழைந்துதொலைக்கிறதுகாண்டாமணியோசைஇறைவாநான்உன்னை சபிக்கிறேன்…. த.அகிலன்
துயரின் பயணம்….
எப்போதும் ஏதேனுமொரு புன்னகையிலிருந்தே ஆரம்பிக்கிறது துயரம். ஓரு புன்னகையில் இருந்து மற்றுமோர்புன்னகைக்கு… வழிநெடுக புன்னகைகளை வாரியணைத்தபடியும் ஒவ்வொரு புன்னகையின் முகத்திலும் தன்னை அறைந்தபடியும் பயணிக்கிறது துயரம்… அது தன் தீராக்காதலோடு தொடர்ந்தும் இயங்கும் இன்னொரு புன்னகையைநோக்கி த.அகிலன்