தீபங்கள் பேசத்தொடங்கினமனிதர்கள்குரல்களற்றுத்திணற ஸ்பரிசங்களற்றதீபங்களிற்குக் குரலிருந்தது மௌனத்தின் வேர்களை அறுத்துக்கொண்டுஷதுயரின் பாடல்தொலையத் தொலையதீபங்களின் குரல்காற்றில் எழுகிறது அது புனிதங்களின் மொழி மனிதங்கடந்தவரின்மறைமொழி இப்போதுஉயிரின் நுனிவரைக்கும்இறங்குகிறதுதீபங்களின் குரல் நிச்சயிக்கப்படாதஒரு கணத்தில்தகர்ந்து போகிறதுதீபங்களின் குரல் மனிதர் மீண்டும்குரலுற்றார் உயிர் எரியும் பாடல்காற்றில் எழுகிறது
Category: கவிதைகள்
உரசிப்போகும் பட்டாம்பபூச்சி…
நான்அவளைக்காண்கிறேன்தேவதைகள் நிரம்பிய தெருவில்அவளை மட்டுமாய்தனியே அவள்கண்களில் இருந்து பறந்து போகும்பட்டாம் பூச்சியைக்குறிவைத்துநடந்தபடியோஅல்லதுதேவதைகளோடுகொக்கான் வெட்டியபடியோஅல்லதுமுந்தையநாள் இரவில்தன்னோடு உறங்கமறுத்தபூனைக்குட்டியைப்பற்றியஏக்கம் நிரம்பிய சொற்களோடோதான்அவள் எப்போதுமிருக்கிறாள்…. எப்போதாவதுநான்தேவதைகளின் தெருவில்நடக்க நேர்கையில்என்னை உரசிச்செல்கிறதுஅவள்கண்களின் பட்டாம்பூச்சி
புழுக்களைத்தின்னும் பூக்கள்…
பூக்கள் சிதறிய வனத்தின்விழிகள் எங்கும்புழுக்களின் ஆக்கிரமிப்பு வாசம் இழந்துவாழ்வழியும் நிலையில்பூக்கள். அவற்றில்மலர்ச்சி மறைந்துவேதனை வடுக்கள்விழிகளில் வழிந்தது. இதழ்களில் எங்கும்துழைகளின் நிழல்கள்அந்நிழல்களின்இருளில் அமிழ்ந்து போயிற்றுபூக்களின் வாழ்தல் பற்றிய நினைப்பு பூக்கள் இப்போதுபுழுக்களைத்தின்றனதம்இயல்பு துறந்து. த.அகிலன்