ஒரு பேனாவைப்போல்எப்போதும்கொட்டிவிடத்தயாராய்என்னுள்நிரம்பிவிட்டிருக்கும்ஞாபகங்கள்…… சின்னதாய்ஓர்எறும்பின் ஊரல் கொஞ்சம்நளினமாய் மோதும்மெல்லியகாற்று ஏன்? ஒரு தேனீர்க்குவளையின் ஒரம் கூடப்போதுமானதாயிருக்கும் ஞாபகங்களைக்கிளறி விடுவதற்கு.. இன்னமும்என்னுள்புருவம் சுருக்கிபார்த்துக்கொண்டேயிருக்கிறாய்நீ. மறுபடியும்மீன்தொட்டிஉடைந்து நொருங்குகிறதுமனசுள்; நான்மூடிவைத்துவிடுகிறேன்பேனாவைமீண்டும்ஏகாந்தத்தில் இருந்துஇறங்கும்மனசுஇயல்பிற்கு….
Category: கவிதைகள்
வீடு அல்லது அக்கராயன்
கொஞ்சமாய் உள்நுழைந்து பார்க்கும்மழை.. மேலோடுதடவிப்போகும்நிலவு.. உள்ளே புகுந்துஅடிக்கடிவிள்ககை அணைத்துவிடுகிறகாற்று… ஆசுவாசமாய்அடுப்பைக் கடந்து நடக்கும்பூனை ஆனாலும்.. விடியலில்பூக்கத்தான் செய்கிறதுமுற்றத்துநித்திய கல்யாணி. நண்பர்களே 1995 ல் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் இருந்து வெகு தொலைவில் இருந்த அக்கராயன் என்னும் கிராமத்தில் நாங்கள் வசிக்க நோர்ந்து அந்த இடப்பெயர்வு அனுபவங்களின் பதிவு இதுத.அகிலன்
காதல்..
காதல்ஒரு நதியின் நடனத்தைப்போலமேகத்தின் பயணத்தைப்போலஇலக்குத்தேடியலையும்வேட்டைக்காரனாய்இதயத்தை நெருங்குகிறது. சூரியனின்காதல்மரங்களின்பசிய இலைகளில்வழிகிறது. நிலவின்காதல்முற்றத்தில் பொழிகிறது கருணையோடு குழந்தையின்காதல்ஒரு புன்னகையில் இப்படியே இறுதியில் துளித்துளியாய்பிரபஞ்சம்காதலால்நிரம்பி வழிகிறது. பூக்களின்இரகசிய முத்தங்கள்காற்றில் கரைந்துகன்னங்களை வருடுகிறது.. த.அகிலன்