இவர்கள்அழிவுகளினின்றும்சிதைவுகளினின்றும்எதிர்பார்க்கிறார்கள்கலையும் மேகங்களிடையேஅவன் வருவதாய்யாவரும் நம்புகின்றனர். ஆயிரம் குளம்படி ஓசைகளுடன்நிறையப் புரவிகளினிடையில்ஒளிரும் அருவமாய்அவனை வருணிப்பர்சிதைவுகளினின்றும்குருதியூறிய,வயல்வெளிகனின்றும்முகாரியினுடையஎல்லைகளிற்கு -வெளியேதுயரம் கடந்துஎப்போதோ எரியூட்டப்பட்டஅவர்களின் கனவுகளைஅவன் தங்களிற்குபரிசளிப்பனென்றும்பேரட்சகனாய்அவனிருப்பதால்பேரற்புதங்கள் நிகழ்த்துவனென்றும்எதிர்பார்க்கின்றார்கள். ஒவ்வோர் எதிர்பார்த்தலின் போதும்அவன் ஏமாற்றினாலும்ஆச்சரியமாய் – இவர்கள்மறுபடியும் எதிர்பார்ப்பர். அவன் வரவைமுன்னிலும் அதிகமாய்…அழிவுகளோடும்காத்திருப்பர் -முன்னிலும்அதிக அற்புதங்களோடானஅவன் வருகையின் மீதானநம்பிக்கைகளோடு…… த.அகிலன்
Category: கவிதைகள்
கனவு வெளி
ஜதார்த்தங்களை சிலவேளைகளில்ஜீரணிக்க முடிவதில்லை மனசின்வடிவமைப்புக்களிற்குவெளியே தீர்மானிக்கப்படும்முடிவுகளினால்நொருங்கும் கனவுகள் எண்ணங்களிலானதுகனவு வெளிஅவ்வெளியின் மீதுஏற்றப்பட்டிருக்கிறதுவாழ்வு சிதைகிற அதற்காய்அழுகிறது என் மனசுஆளறுந்த தெருவின் ஒற்றைநாயெனபிரக்ஞை அற்று… வடுக்களின் மீதமர்ந்தும்மனசுமிச்சம் வைக்கிறது வாழ்வைகனவுகளைக் கோர்ப்பதற்காய் எனினும் என்கனவுகளைகோர்ப்பதற்காய்எனினும்என்கனவுகளை ஓரம் கட்டுகிற ஜதார்த்தங்களிற்குதெரிவதில்லைகனவுகளின் மீதானஎன் மனசின் அக்கறை த.அகிலன்
மெளனம்…
எல்லாவற்றையும்உன்னுள்ளே குமைத்துஏன்நீமௌனம் சமைக்கிறாய். எல்லாவினாவுதல்களின் போதும்உன்புன்னகைக்குள்எதனை நீசொல்லநினைக்கிறாய் ஒலிகள் எதுவுமற்ற உனது மொழிஇரைச்சலை ஜெயிக்குமா? அடுத்தவனையே பேசுபொருளாக்கிஎப்போதும்அலைகிறது உலகம். அதனாலும்மௌனம் நிறைவுதான்ஆனால்சலசலப்பேசங்கீதம் என்றாயிற்று. ஏது சொல்ல மௌனம்ஒரு மின்சாரத்தைப்போலபாதைகளைப்பற்றியஅக்கறைகளற்றுப் பயணிக்கும்வேகமாய். எப்போதும்மொட்டுக்களின்மௌனம் உடைகையில் தான் அழகு நீபேசுகண்ணிவெடிகளின்நிலத்தில் நடப்பதைப்போல்சற்றே அசந்தாலும்காத்துக்கிடக்கிறது இரைச்சல்உனக்கான வார்த்தைகளை ஓலமிட.. த.அகிலன்