எனை விலகிபுல்லின்நுனியில் இருந்து ஒரு பறவையைப்போல்எழுகிறதுஉன் முத்தத்தின்கடைசிச்சொட்டு ஈரமும் நான்புதினங்கள்அற்றுப்போனசெய்தித்தாளைப்போலாகிறேன்நீயிராப்பொழுதுகளில்.. மழைநின்றமுற்றத்தில்உன்காலடித்தடங்களற்ற வெறுமைநிழலெனப்படிகிறதுநம்நினைவுகளின்மீது த.அகிலன்
Category: கவிதைகள்
எறும்புகள் உடைத்த கற்கள்
வலிஉணரும் தருணங்களில்எங்கிருந்தோ முளைக்கிறதுஎனக்கான கவிதை காற்றழிந்த மணல்வெளியில்காத்திருக்கும்என்காலடிகாற்றில் அழிவதற்காய் நான்கானலைஅருந்த தயாராகையில்எப்படியாவது காப்பாற்றிவிடுகிறது மேகம் எனக்குத் தெரியும்கடித்துவிடுகிறகடைசிநொடி வரைக்குமேபுகழப்படும் எறும்புகள் ஆனாலும்எறும்புகளிற்குகவலைகிடையாஎதைக்குறித்தும் என்வழியெங்கும்நிறுவிக்கிடக்கிறதுஎறும்புகள் உடைத்தகற்கள் த.அகிலன்
அழகுதிர்ந்த கவிதை
என்னிடம்மகிழ்ச்சியின்சுவடு தானுமில்லை என்னால்…..உலர்ந்து போனஇரத்தத்தின் அடியில்ரோஜாவின் இதழ்களைக்கற்பனை செய்ய முடிகிறது நேற்றுப் பிடுங்கியெறியப்பட்டபெருமரத்தின்மொட்டுக்களையும்பிஞ்சுகளையும் குறித்ததுயர்மிகும் சொற்கள் மட்டுமேஇப்போதுஎன்னிடமுண்டு அழகுதிர்ந்த கவிதைதுயரமும்பிணமும் நாறிக்கிடக்கும்தெருவழியேஅழுதலைகிறது கேள்விகளற்றநிலத்தில்துயர்மிகும்சொற்களைத் தவிரவும்வேறென்னதான் இருக்கமுடியும்? த.அகிலன்