எல்லாவற்றிற்கும்சாட்சியாயிருப்பதன் இயலாமை எனை விழுங்குகிறது.. ஒருநாற்பது வயதுக்கன்னியின்கறுத்தப்பொட்டைப்போலநிஜத்தின் உறுத்தல்என் கனவுகளின் மேல்பயணிக்கிறது….. முடியாது புன்னகைக்கும்வேதனைக்கும்அழிவுக்கும்மீட்சிக்கும்அவமானத்திற்கும்……………………. இப்படிஎல்;லாவற்றுக்கும் சாட்சியாய்மௌனத்தை விழுங்கிக் கொண்டுஎத்தனை நாளைக்குஇருந்துவிட முடியும்…ம். த.அகிலன்
Category: கவிதைகள்
நிர்ப்பந்தம்
அலைகிறது மனசுஅப்படியேஸ்தம்பித்துப்போனவாழ்வின் நினைவெழுந்துமனவெளியெங்கும் அலைகிறது.. நிலவின் பின்னழகு போலவேநிதர்சனங்களும்விழிகளுக்கு தெரியாமலே…. முகங்களின் கொந்தளிப்பில்மூடிவைக்கப்படுகின்றன மனசுகள்… வாநானும் நீயும்திறந்த மனசோடுகாற்றைப்போல்எங்கும் நுழைவோம்.. எனக்கு நானும்உனக்கு நீயும்எல்லைகள் வகுத்துக்கொண்டுவறண்டுபோகாமல்எனக்கு உன்னையம்உனக்கு என்னையும்முழுவதும் காட்டுகிறவரைஇருட்டுக்குள் இருக்கிறநம் வாழ்க்கை இருட்டுக்குள்ளேயேஇருக்க நிர்ப்பந்திக்கப்படுவதாய்…. த.அகிலன்
பிரிவின் சித்திரம்
எனக்கும்உனக்குமான இடைவெளிபிரிவின் சொற்களால் நிரம்புகிறது… உதிர்ந்து விழும்நட்சத்திரத்தின் பேரோசைபிரிவின் காலடியில்மௌனித்து வீழ்கிறது. தாகித்தலையும்நதியின் தடங்களில்நான் வரைந்து கொண்டிருக்கிறேன்…நம் பிரிவின் சித்திரத்தை.. த.அகிலன்