என் கடைசி வரிகளைகடல் மடியில் எழுதி வருகிறேன்யாரிடமும் பகிர்ந்து கொளமுடியாத படிக்கு பேசாமல் இருக்கும்அலைகளிடம்தொலைந்து போகும்கண்ணீர்த்துளியைப் போலபோய் விடட்டும்என் கவிதை எல்லாம்முடிந்து போய் விட்டது எப்போது கேட்டாலும்யோசிக்காமல்பணம் தரும் பெரியம்மாவின்கண்ணீர் நிறைந்த முகம்கடந்து வந்தாகி விட்டது இனிமறுபடியும் வீட்டு முற்றத்துக்குப்போய்விட முடியாது இனிஅண்ணியிடம் சோற்றைப்பிசைந்து தருமாறு சண்டையிட முடியாது இனிகுட்டிப் பையனின் எச்சில் முத்தங்கள்கிடையவே கிடையாது இனிஎன் தேவதையைஉயிர் கொல்லும்அவள் கண்களை மறுபடியும்சந்திக்கவே முடியாது இனி எப்போதும்உயிருள்ள ஒரு கவிதைஎன்னால்எழுதவே…
Category: கவிதைகள்
உதிர்ந்து கொண்டிருக்கும் நான்..
உன்கொலுசின் அசைவுகளில்நான் உதிந்து கொண்டிருக்கிறென்… உதடுவரை வந்துஉள்ளடங்கிப்போகும்உனக்கான ஒரு சொல்…எனை தின்றுவிட்டுப்போகட்டும். நான்ஏங்கிக்கொண்டிருக்கிறேன்… நடுக்கடலில்கப்பலினின்றும்உதிர்ந்த காலி மதுப்புட்டியைப்போலஉன்மனசின் ஆழங்களுக்குள்போய்விடமாட்டேனா? த.அகிலன்
மூழ்கும் கப்பல்கள்….
பெருமாள் கோவில்சிற்பங்களைக் கழுவிக்கொண்டிருக்கிறது மழை நிர்வாணப்பெண்கள்மறுபடியும் நனையமரங்களினிடையே மறையும் கண்ணன். என்காலகளினடியில் மறுபடியும்நழுவி ஓடிக்கொண்டிருக்கிறதுபூமி நீரின் மீதுமுடிவிலிக்கோடுகளைஒற்றைப்புள்ளியில் இருந்துவரைந்து கொண்டிருக்கிறதுஇலையிருந்து நழுவும்ஒற்றைத் துளி. குழந்தைகள் கொப்பிகளைக்கிழிக்கின்றன எனக்குள்மிதக்கத்தொடங்கின கப்பல்கள் இப்போதுநீரினிலாகிறதுகுழந்தைகளின் உலகுயாரேனும் அதைமறுக்கையில் மழைஇடம்பெயர்கிறதுகுழந்தைகளின்கண்களிற்குள்.. எனக்குள்மூழ்கத் தொடங்கினகப்பல்கள்… த.அகிலன்