பிரியத்தின்சொற்கள் வற்றிக்கொண்டிருந்தன. தாகித்தலையும்நம்இறுதிப்பார்வைகள்நதியைப்போல்ஓடிக்கொண்டிருக்கிறதுநமக்கிடையே பற்றியிருந்தவிரல்கள்இளகத்தொடங்குகையில் வானம்குமுறத்தொடங்கியிருந்தது இருவரும்கண்கள்ஏன் முதுகுகளிடம்இல்லை என்பதாய் நடக்கத்தொடங்கினோம் சுவடுகளைக்கரைத்தபடிபெய்து கொண்டிருந்ததுமழை. த.அகிலன்
Category: கவிதைகள்
காத்திருத்தல்
மொட்டை மாடியில்காத்திருக்கிறேன்நிலவாவதுவரட்டும் என்று… கறுத்தக்கட்டிடங்களின்மேலாக மிதந்து கொண்டிருக்கிறதுதனிமைஒரு பறவையைப்போல.. கொடியில்காயப்போட்டதுணிகளில்தொங்கிக் கிடக்கிறதுநினைவுகள் தொலைவில்தெரியும்தொலைபேசிக் கோபுரததின்சிவப்பு வெளிச்சங்கள்ஒருஅசரீரியைப்போலதிகிலூட்டும் அறைமுழுதும்நிரம்பிய புத்தகங்கள்சிடீக்களில்நிரப்பப்பட்ட இசைஎதுவுமே போதுவதில்லைஎரிந்து கொண்டிருக்கும்தனிமையைஅணைக்க… த.அகிலன்
மழை என்னும் பிராணி
திடீரெனமுழித்த தூக்கத்தில் உள்ளே வரத்துடிக்கும் ஒரு பிராணியைப்போல கதவுகளைப்பிறாண்டிக்கொண்டிருந்ததுமழை என்தலையணைக்டியிலிருந்தகனவுகளையும்அழைத்துக்கொண்டுநனையப்போயிருக்கிறதுதூக்கம் த.அகிலன்