மழை நின்ற பின்னால்நீ வந்துபோனதடங்களை…மறுபடியும்….கலைத்துவிட்டு போகிறதுமழை….. மறுபடியும்மழை நின்ற பிறகு…குதித்துக்கொண்டோடுகிறது…உன் கொலுசு…மனசிருந்து நழுவி….
Category: கவிதைகள்
ஒரு கவிதையின் பிறப்பு..
என் எதிரேயிருக்கும் தேனீர்க் குவளையுள்வீழ்ந்து ஓய்கிறதுமின் விசிறி….. நான்மூடப் படாதகவிதைப் புத்தகத்தைமறுபடியும் பிரிக்கிறேன்…. தாள்களிடையில்தட்டுப் படுகின்றஉன்ஞாபக ஸ்பரிசங்கள்என்விரல்களில் வழிய இந்தக் கவிதையைஎழுதத்தொடங்கினேன் ….
கடந்து விடமுடியா நினைவுகள்
நான்நம்பிக் கொண்டிருந்தேன்இது நாள் வரையும் மரணத்தின்வாசனை மிகும்ஊரின் தெருக்களைக்கடந்தாகி விட்டதென்றும்…… நகரத்தின்இடுக்குகளில்எனக்கான பூஞ்செடிகள் காத்துக் கிடக்குமெனவும்….. தடைகளும் எல்லைகளுமற்றுவிரியும் புதிய வானத்தில்என்சிறகுகள் கொண்டேஎனக்கான வானவில்லைவரைந்து விட முடியுமென்றும்….. நான்நம்பிக் கொண்டிருந்தேன்இது நாள் வரையும்….. மரணத்தின்வாசனைமிகும்அத்தெருக்கள் தான்என்உள்ளங்கையின் ரேகைகள்என அறியாது… த.அகிலன்