தலைகளாலானதெருவில்…. குழந்தைகளின் புன்னகைள் நிரம்பிய வண்ணங்களை விற்கிற பலூன்காரன்…. தன்புன்னகையைக் கேட்டு வீரிட்டழும் ஒரு குழந்தை விக்கித்து ஓய்கையில்… ஏனோஎச்சில் ஒழுக என்பெயர் சொல்லிச்சிரிக்கும்…ஒரு முகம்கடந்து போகிறது என்னை….
Category: கவிதைகள்
நிகழ்தல்….
நீஎன்ன சொல்கிறாய்…. னௌனம் கீறியஎன் வார்த்தைகளை விழுங்கிப்போகும் உன்பார்வைகளில்…மிதந்து வருகின்றனவா ஏதேனும்எனக்கான சேதிகள்…. அலைகள் ஓய்ந்தபின்ஆழ ஊடுருவும்பார்வைகளுக்குச்சிக்காது…ஏகாந்தத்தில்நுழைந்துவிடுகிறது…நீ எறிந்த கல்…. அர்த்தமற்று உளறும்என்பேச்சு…சில பொழுதுகளில்விக்கித்து நிற்கும் என் மௌனம்…போதுமானதாயிருக்கிறதா?நான் உனக்குள் நிகழந்துவிட….
வேட்டை…….
விளக்கை மேயும்பூச்சி…. வேட்டைக்குத் தயாராகிறது பல்லிபூனையின்நிழற்கரங்கள்தன்மீது படிவதைஅறியாது….