இன்று உயிராயுதங்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற கரும்புலிகளினுடைய நாள் அதை முன்னிட்டு கவிஞர் பஹீமாஜஹான் எழுதிய ஒரு கடல் நீருற்றி என்கிற கவிதை இங்கே மறுபடியும் இடப்படுகிறது. படம் மூனாஒரு கடல் நீருற்றிநட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!எமக்குப் பின்னால்பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!தூரத்து வயல் வெளியை மூடியிருந்ததுவெண்பனிதென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவிஎம் செவி வழி நுழைந்ததுவங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !சந்தடி ஓய்ந்த தெரு வழியேநீயும் நானும் விடுதிவரை நடந்தோம்…
Category: கவிதைகள்
அம்மம்மாவின் சுருக்குப்பை…..
ஒரு கவிதைஎனை அழைத்துப்போகிறதுஊருக்கு….. தும்புமிட்டாஸ் காரனின்கிணுகிணுப்பிற்கு அவிழ்கிற அம்மம்மாவின்சுருக்குப்பையைப்போல..அவிழ்ந்து கிளம்புகின்றனஞாபகங்கள்…. சிட்டுக்குருவியின்இறகுகளில்பின்னப்பட்டிருந்தது வாழ்க்கை.. ஒரு வேட்டைக்காரனின் குறிக்குள் வீழ்ந்தபின்வரையறுக்கப்பட்டவானத்திடம்அதிசயங்கள் ஏது மில்லை…. தடங்கள்இறுகிக் கொண்டன…
நின்று போன கவிதை…
உதிர்ந்து விழுகிறஇலையின்நடனம்போலநிகழ்ந்து போகிறது உன் பிரிவு… அங்கேயே..அப்போதே..நின்று போனஎன் வார்த்தைகள்காத்திருக்கும்மறுபடியும்கவிதையின் சாலைக்குஅழைத்துப் போகும்உன் புன்னகையின் வருகைக்காய்..