எனது சொற்களை அடைத்துக்கொண்டிருப்பது எது? கைநழுவிய சொற்களா? சொற்களால் செய்யப்பட்ட கொலைவாட்களா? உதிர்ந்துபோன காலமும் மலராத கணமுமா? என் சொற்களைத் தேக்கிவைத்திருப்பது எது? அவசர அவசரமாகத் தாம் நடந்த தடங்களை அழித்தபடி வழிகாட்டிகள் திசைகளை மாற்றினர் கொலைவாட்களைப் பதுக்கியபடி நண்பர்கள் குலாவினர் எதிரிகளிடம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது நேர்மை. யேசுநாதர்கள் பெருகிப்போயிருக்கும் சபையில் ஓரு குற்றவாளியாய் உள்நுழைகிறேன். எல்லோரிடமும்… போதனைகள் இருக்கின்றன தண்டனைகள் இருக்கின்றன கேள்விகள் இருக்கின்றன பதில்கள் இருக்கின்றன நியாயங்கள்…
Category: கவிதைகள்
படகில் நுழையாக் கடல்
அத்தனை எளிதன்று அகதியாதலும் அதனின்று விடுபடலும். நீண்ட அலைதலின் முடிவில் நதி மருங்கில் தேங்கிய துரும்பைப் போலவோ அல்லது கடல் வீசியெறிந்த தகரப் பேணியைப்போலவோ எறியப்பட்டிருக்கிறது வாழ்வு. துரும்பைத் திரும்பவும் அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின் எத்தனங்களோடிருக்கிறது உலகம். அலைதலும் தொலைதலும் எறியப்படுதலின் வலியும் துரும்பே அறியும். திடுக்கிட்டு விழிக்கும் எல்லாக்கனவுகளும் விசாரணையிலேயே தொடங்குகிறது. நான் ஓர் அகதி என்னிடமிருப்பதோ அவளைச் சேர்வதான எத்தனங்களும் விசாரணைக்கான பதில்களும் கொஞ்சக் காகிதங்களும் திரும்பவும்…
மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புகள்.
01. 25.02.2009 (முன்) நமது தொலைபேசி உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கின்றன நமக்குச் சொந்தமற்ற செவிகள். பீறிட்டுக்கிளம்பும் சொற்கள் பதுங்கிக் கொண்டபின் உலர்ந்து போன வார்த்தைகளில் நிகழ்கிறது. நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும் உன் ஒப்புதல் வாக்குமூலம். வெறுமனே எதிர்முனை இரையும் என் கேள்விகளின் போது நீ எச்சிலை விழுங்குகிறாயா? எதைப்பற்றியும் சொல்லவியலாச் சொற்களைச் சபித்தபடி ஒன்றுக்கும் யோசிக்காதே என்கிறாய்.. உன்னிடம் திணிக்கப்பட்ட துப்பாக்கிகளை நீ எந்தப்பக்கமாகப் பிடிப்பாய் வாய் வரை வந்த கேள்வியை…