தட்சணா மூர்த்தி அன்பழகன் (27.03.1985 – 05.03.2009) எனக்கு நினைவிருக்கிறது நான் இரண்டாம் தடைவையாகவும் அவன் முதலாம் தடைவையாகவும் கடல் பார்த்தது. ஒரு பள்ளிச்சுற்றுலாவில் மாத்தளன் கடற்கரையை நாங்கள் பார்த்தோம். நான் அப்பாட அந்தரட்டிக்கு சாம்பல் கரைக்கப்போகும் போது முதல் முதலாக கீரிமலைக்கடலைப் பார்த்திருக்கிறேன். அது சாதுவாய் இருந்தது அன்றைக்கு கடல் அச்சமூட்டவில்லை அப்போதெல்லாம் பொங்கிவரும் அலைகளில்லை அலைகள் குறித்த நினைவேயில்லை எனக்கு அப்போதெல்லாம். ஆனால் இம்முறை அப்படியல்ல கடல்…
Category: அனுபவம்
My name is agiilan and I am not a terrorist
00.00.2007 அகிலன்: அண்ணா ஓட்டோ வருமா? ஓட்டுனர்: எங்க போணும்பா? அகி: வளசரவாக்கம் போகோணும் வருவீங்களா? ஓட்: ஆ போலாம்பா அகி: எவ்வளவு ஓட்: நீ சிலோனாப்பா?. ………………………………… 19.02.2010 அகி: ஆட்டோ .. ஆட்டோ? ன்ணா கோடம்பாக்கம் வருமா? ஓட்: ம் போலாம்.. அகி: எவ்ளோ. ஓட்: பிப்டி குடு அகி: ஆ போலாம் ……………… ஓட்: நமக்கு எந்தூரு தம்பி அகி: …
வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு…..
கூரையின் முகத்தில் அறையும் மழையைப் பற்றிய எந்தக் கவலைகளும் அற்றது புது வீடு இலைகளை உதிர்த்தும் காற்றைப் பற்றியும் இரவில் எங்கோ காடுகளில் அலறும் துர்ப்பறவையின் பாடலைப் பற்றியும் எந்தக்கவலைகளும் கிடையாது புது வீட்டில்.. ஆனாலும் என்ன புது வீட்டின் பெரிய யன்னல்களூடே நுழையும் நிலவிடம் துளியும் அழகில்லை.. இந்தக் கவிதையை நாங்கள் அக்காவின் லண்டன் காசில்.. அல்லது லண்டன் கடனில் கட்டிய புதுவீட்டிற்கு குடிபோன அன்றைக்கு எழுதினேன். (இதைக்…