நானும் ஒரு பிரபலமான வலைப்பதிவராகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டாலும் அது முயற்சியாகவேயிருக்கிறது இப்போது வரைக்கும். கடைசியா ஒரு சாத்திரியைப் போனவாரம் சந்தித்தேன். (இவர் பதிவர் சாத்திரி அல்ல டி.வி.புகழ்) அவர் சொன்னார் ஏழரைச் சனியன் உச்சத்தில் இருப்பதால் இதுபோன்ற தாமதங்கள் வரத்தான் செய்யும்.. ஆனாலும் நீர் அஞ்சக்கூடாது எண்டு. நானா அஞ்சுவதா எண்டு அவர் எதிரில் மிடுக்காக சொன்னாலும் அதிகாலை பதினொரு மணிக்கு எழுந்து பல்விளக்குகையில் மதில் தண்ணீர்த் தொட்டிக்கு…
Author: த.அகிலன்
கேவலமான பிரார்த்தனையும் துயரவியாபாரமும்…
01. என் சனங்களின் பசியை எழுதும் இந்த வார்த்தைகளின் வெட்கத்தையும் துயரையும் நீ அறிவாயோ இறைவா? எனது குழந்தைகளின் இரவுகளை தயைகூர்ந்து வெடிச்சத்தங்களால் நிரப்பாதிரும்.. இரண்டு துப்பாக்கிகளுக்கிடையில் மிரள்கிற அவர்களின் மழலைச் சொற்களின் அச்சத்தை விலக்கும்.. என் சனங்கள் பாவம் முன்னொரு போது போரினின்று நான் வெளியேறுகையில் ஒன்பதாம் திசையில் வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை அவர்களுடைய வானத்திலேயும் ஒளிரச்செய்யும் என் ஆண்டவரே.. 02 என்னிடமிருக்கும் இந்தச் சொற்கள் சுயநலமிக்கவை…. பதுங்குகுழியின்…
கடல்புரத்தில்- நிர்வாணமான மனமும் கடலும்
வண்ண நிலவனின் கடல் புரத்தில் வாசித்தேன். நீண்டநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நாவல்.வாசித்து முடித்தபின்னும் கடல் புரம் அலைகளைப்போல் இரைந்துகொண்டிருக்கிறது இன்னமும். அதன் சொற்களாலும் அதனுள் நடமாடுகிற மனிதர்களாலும். தான் நேசிக்கிற ஒன்றைத் தவிர்க்க,அல்லது பிரிய நிர்ப்பந்திக்கப்படுகிற மனிதர்களின் துயரம் அந்த நாவலில் குடிகொண்டிருக்கிறது. அந்த நாவலில் வருகிற குருஸ் ஒரு குறியீடு. எல்லாவற்றையும் நேசிக்கிற தனது பாரம்பரியத்தை, தனது நிலத்தை, கடலை,காற்றை பிரிய மறுக்கிற அவற்றின் மீது தமது எல்லாப்பிரியங்களையும் கொட்டிவைத்திருக்கிற…