தேவகாந்தனின் மொழி அதிகமும் அழகான உரையாடல் தருணங்களால் நிரப்பப் படாதது. ஆனால் கனதியான கதைத் தருணங்களால் வாழ்வையெழுதும் சொற்கள் அவருடையவை. ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் தேவகாந்தன் ஒரு முதிர்ந்த யானையைப் போல இருக்கிறார். மெதுவான நடை ஆனால் தேங்காத பயணம், எல்லாத்திசைகளிலும் வழியறிந்த யானை. தமிழ்ச்சமூகம் அவரைக்கொண்டாடியது போதாது என்று அவரைப் படிக்கும்தோறும் தோன்றிக்கொண்டேயிருக்கச் செய்பவை தேவகாந்தனின் சொற்கள். நான் முன்பொருமுறை சொன்னதைப்போல அரசியல் சதிர்களுக்கப்பால், போர்க்களத்தின் முன்பும் பின்புமான தமிழ்நிலத்தின்…
யாழிசை-இயக்குத்துக்போன பெட்டை ஒருத்தியின் கதை
இந்த நாவலைப் பற்றிய உரையாடலைத் தொடங்குவதற்கு முன்பாக இந்த நாவலின் நிகழ் களத்தின் பிண்ணணியை முன்வைத்து சில வற்றைச் சொல்லிப் பின்னர் இந்நாவல் பற்றிய எனது எண்ணங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த நாவலின் கதாநாயகி ஒரு முன்னாள் போராளியாக இருப்பதனால் இதனைச் செய்யவேண்டியிருக்கின்றது. முன்னாள் போராளிகளை எங்களுடைய சமூகம் 2009 ற்குப்பிறகு எவ்வாறு அணுகுகிறது என்பது வேதனையோடும் வெட்கத்தோடும் பேசப்படவேண்டிய பொருளாக இருக்கிறது. எந்தச் சனங்களுக்காக அவர்கள் போராடினார்களோ,…
கதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்
பயணம் என்பது ஒரு வகையில் விடுதலைதான். பயணம் நாம் அடைபட்டிருக்கும் அழகான கூண்டின் வாயிலைத் திறந்து வைத்துவிட்டு நாம் வெளியேறுவதற்காக காத்திருக்கிறது. நாம் அன்றாடம் பழகும் சூழலும் மனிதர்களும் நம்மை ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்துகிறார்கள். உண்மையில் நம் நெருக்கமான சுற்றத்திடம் நாம் அதிகம் உள்ளொடுங்கியும், தெரியாத சூழலில், புதிய நிலத்தில் நம்மை அதிகம் திறந்துகொள்ளவும் தயாராயிருக்கிறோம். பயணம் மட்டுமே பிரதிபலன் எதிர்பாராத அறிமுகமற்ற மனிதர்களின் பேரன்பை நாம் தரிசிக்கக்…